ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற கனிமொழி எம்.பி. உள்பட தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை:
உ.பி. பெண் கொலை :
உத்தரபிரதேசம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டன குரல்கள் எழுந்துள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்தை கண்டித்து ஆளுநர் மாளிகையை நோக்கி தி.மு.க. மகளிரணி பேரணி செல்வார்கள் என்று அறிவித்திருந்தார்.
தி.மு.க. பேரணி :
இதையடுத்து, சென்னை, சின்னமலையில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்திய நிலையில் தி.மு.க. மகளிரணியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இந்த பேரணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கனிமொழி கைது :
இந்த பேரணியை தூத்துக்குடி எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி வழிநடத்தினார். பேரணியின்போது உ.பி. பெண்ணுக்கு நியாயம் கேட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது. பேரணியில் பங்கேற்றோரை காவல்துறையினர் சின்னமலை அருகே கைது செய்தனர். இதனால், கனிமொழி உள்பட ஆயிரக்கணக்கானோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கனிமொழி கைது செய்யப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.