கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 தொகுதிகளிலும் தலா 25,000 திமுக ஆதரவு வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பெரிய அளவில் சதி நடப்பதாக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கரூரில் திமுக ஆதரவு வாக்காளர்களை மட்டும் குறிவைத்து இந்தச் சதி நடக்கிறது. போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் வெளியூர் ஊழியர்களை கரூருக்கு அழைத்து வந்து உள்ளூர் அதிமுகவினர் துணையுடன் திமுக ஆதரவு வாக்காளர்கள் யார் யார் என்ற புள்ளி விவரத்தை அதிமுக தயாரித்துள்ளது.
திமுகவுக்கு ஓட்டுப் போடக்கூடியவர்களின் வரிசை எண்களில் வட்டம்போட்டு அதனை மாவட்ட ஆட்சியர் வசம் அதிமுகவினர் ஒப்படைத்துள்ளனர். அதனை அப்படியே அவர் பூத் குழுவினருக்கு அனுப்பியுள்ளார்.
குறுக்கு வழியில் வெற்றிபெற்று விடலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகல் கனவு காண்கிறார்.
இந்த விவகாரத்தை இப்படியே நான் விடப்போவதில்லை. வாக்காளர் பட்டியலில் திமுக ஆதரவு வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும். நான் நீதிமன்றத்துக்குச் செல்லவும் தயங்கமாட்டேன்” என்றார்.