திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு ஏரியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வட மண்டலம் சார்பாக வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நோக்கில் முன்னேற்பாடு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
வெள்ள அபாய காலங்களில் கயிறு மற்றும் சிறப்பு தளவாடப் பொருட்களை பயன்படுத்தி விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் முறைகள்,
மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் முறைகள் மற்றும் மீட்புப் பணிகளின் போது சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் முதலியன குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
முன்னதாக இயக்குநர். Dr.C.சைலேந்திரபாபு IPS, அவர்கள் கலந்து கொண்டு போலி ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டார். மேலும் மாநில பயிற்சிப் பள்ளி இணை இயக்குநர் திரு. எம். ஷாகுல் ஹமீது மற்றும் வட மண்டல இணை இயக்குநர் திருமதி. ப்ரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.