தமிழகத்தில் நவ.11 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுப்பது வழக்கம். இதனால, ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சிறப்பு அரசு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. நடப்பாண்டில், ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பேருந்துகள் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படுகின்றன. வழக்கம் போல சென்னையில் 5 இடங்களில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27 ஆயிரம் பேர் தீபாவளிக்கு வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதக்கவும்,
கடந்தாண்டு 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தீபாவளிக்கு முன் 14,757 பேருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.
சொந்த ஊர்களுக்கு செல்ல நவ.11, 12, 13ம் தேதிகளில் தீபாவளி சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதோடு, தீபாவளிக்குப் பிறகு ஊர் திரும்ப நவ. 15, 16, 18 தேதிகளில் மீண்டும் 16,026 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.