தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஞானதேசிகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ஞானதேசிகன். இந்நிலையில் நேற்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தமாகா கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிகே வாசன், ‘ஞானதேசிகன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஞானதேசிகனுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. அந்த முடிவுகள் நேற்று வெளியாயின. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




