10 ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வுகளுக்கு நுழைவுசீட்டுகளை நாளை மறுதினம் முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை:
10 ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் வருகிற 15 ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நுழைவுசீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், கடந்த 26-3-2020 அன்று ரத்து செய்யப்பட்ட பிளஸ்-1 வேதியியல், புவியியல், கணக்கு பதிவியியல் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் 15 ம் தேதி முதல் நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுசீட்டு மட்டுமே வழங்கப்படும்.
தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




