விருத்தாச்சலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கோபி. இவரின் 17வயது மகள் விருத்தாச்சலம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்றிரவு திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறுதி சடங்குகள் இன்று நடைபெற்றது. இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், மாணவி சரியாக படிக்கவில்லை என்பதால் பெற்றோர்கள் முகம் கொடுத்து பேசவில்லை என்றும் இதனால் மாணவி விரக்தியில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. இதுபோன்ற எண்ணம் வந்தால் உடனடியாக 104 என்ற எண்ணிற்கு கால் செய்யுங்கள். அல்லது ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையம்: 044 -2464000 (24 hours) என்ற எண்ணிற்கு உடனே அழையுங்கள்.
-பா.ஈ.பரசுராமன்.