இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம்,கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
-பா.ஈ.பரசுராமன்.




