ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து சுதந்திர தின விடுமுறையும் சேர்ந்து வருவதால் (3நாட்கள்) சென்னையில் வசிக்கக் கூடிய மக்கள் சொந்த ஊருக்கு சென்றுவர முடிவு செய்துள்ளனர். ரயில்கள் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை 3 மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னையில் இருந்து திருச்சிக்கு அதிகப்பட்சம் ₹800 வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ₹2,300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவைக்கு வழக்கமாக ₹1000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ₹3000 வசூலிக்கப்படுகிறது. இதேபோல், சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக ₹1400க்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ₹3500க்கும், ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு செல்ல ₹4000மும் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில், தமிழக அரசு தலையிட்டு அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.