எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நாட்டின் 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 13 முதல் ஆகஸ்டு 15வரை மூன்று நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் உள்ள டிபியில் (முகப்பு பக்கத்தில்) தேசியக்கொடியை வைக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் இன்று காலை முதல் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது செவ்வந்தி இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பின் இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த அனைவரும் உறுதியேற்போம் என்று கூறினார்