சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆவணி மாத பிரதோசம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்றுமுதல் வருகிற 27ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக் கூடாது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.மேலும், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.




