திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இந்த விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும்,கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாவேந்தர் விருது புதுச்சேரியை சேர்ந்த சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படவிருக்கிறது.
இந்த விருதுகள் செப்டம்பர் 15ம் தேதி விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




