“கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் :
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறள்ளது. தேர்தலில் அதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதமே எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். முதல் கட்ட பிரசாரத்தை முடித்த நிலையில், இரண்டாவது கட்டமாக மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடினார். கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன். வறட்சிக்காக நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பொன்னேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
போரூர் பகுதியில் தேர்தல் பரப்புரையின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி :
விவசாயிகள் படும் சிரமங்கள் எனக்கு தெரியும் என்பதால் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிய பின்னர் மக்களை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர்கள் அ.தி.மு.க.வினர்” என்று அவர் பேசினார்.