சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் போயஸ் கார்டன் சொத்துக்கள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2017ஆம் ஆண்டு சசிகலா, உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரிதுறை சோதனை நடத்தியது. அதைத்தொடர்ந்து, சசிகலாவிற்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கபட்டது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிரே உள்ள,10 கிரவுண்ட் இடம் சசிகலாவிற்கு சொந்தமானது எனவும், அந்த இடத்தில் அவர் புதிய வீட்டை கட்டி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்கள் அனைத்த்தையும் வருமான வரித்துறை முடங்கியுள்ளது. பினாமி தடுப்பி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியாக உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.