85 சதவீதம் மீட்பு விகிதத்ததோடு டெல்லியை (90%) அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சும் வேளையில் அதிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை சற்றே ஆறுதல்
தரும் விஷயமாகவே அமைந்துள்ளது.
இந்தியாவில் பரிசோதனைகளை அதிகப்படுத்தியதாலும், தொடர்பு கண்டறிதல், தகுந்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதாலும், சிறந்த மருத்துவ சிகிச்சையினாலும் கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் கடந்த மணி 24 மணி நேரத்தில் 9,24,998 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதனுடன் 3 கோடியே 85 லட்சத்து 76 ஆயிரத்து 510 மாதிரிகள் பரிசோதிக்கப்பபட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது