இரவு ஊரடங்கு காரணமாக தென்மாவட்டங்களுக்கு பகலில் கூடுதலாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக கடந்து வருகிறது.
இந்தநிலையில், நாளை முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் இரவு நேர போக்குவரத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு காரணமாக கோயம்பேட்டில் இருந்து நாளை முதல் பகல் நேரங்களில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
Read more – முகக்கவசம் அணிய கஷ்டமா இருக்கா ? இனி இஷ்டம் போல் இருங்க, நடங்க.. தளர்வு அளித்த இஸ்ரேல்..
அதன்படி, காலை 6 மணிமுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இரவு 10 மணிக்குள் அந்தந்த மாவட்டங்களை சென்றடையவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல், தனியார் ஆம்னி பேருந்து இயக்கம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகப்படியான பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது.