கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வந்து தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது கொசஸ்தலை ஆறு. அந்த ஆற்றில் நிவர் புயலின் காரணமாக, கனமழை காரணமாகவும் இங்கு ஐந்து ஆண்டுகள் கழித்து வெள்ளப்பெருக்கு வந்துள்ளது. அதனால் அங்கிருந்த தரை பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த ஆற்றின் வழியாக வாகனங்கள் செல்வது பாதுகாப்பு இல்லை என்று கருதி அங்கு போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அம்மாபள்ளி அணையில் தண்ணீர் நிரம்பி வருகிறது. தற்போது அங்கிருந்து 1100 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் விழுகிறது. மேலும் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கால் NM தரைப்பாலமானது அடித்து செல்லப்பட்டுள்ளது.
திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் போகுறவதானது துண்டித்து அசம்பாவிதம் நடக்காமல் காப்பாற்ற பட்டு வருகிறது. மேலும் இப்போது அந்த ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் கூறியது. இதே போல தாமரை பாக்க அணைக்கட்டு பகுதிகளிலும் நீர் நிரம்பி ஓடுகிறது.