CMDA அதிகாரிகள் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் நேரில் ஆய்வு நடத்தியதால் மார்க்கெட் மீண்டும் திறக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் கால் பதித்த முதல் நிலையிலேயே கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான பேர் கொரோனாவின் பிடியில் சிக்கத்தொடங்கினர். இந்நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திருமழிசை துணைக்கோள் நகரத்தில் காய்கறி சந்தையும், மாதவரத்தில் பழ சந்தையும் தொடங்கப்பட்டது. விரைவில் வானகரத்தில் மலர் சந்தை அமைய இருக்கிறது.
நோய் தடுப்பு நடவடிக்கைக்காக வியாபாரிகள் முதலில் அரசின் முடிவிற்கு ஒப்புக்கொண்டாலும் கோயம்பேடு சந்தையை போல் வசதிகள் இல்லாத காரணத்தால் பின்னர் எதிர்க்க தொடங்கினர்.
மேலும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினர். கோயம்பேடு சந்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அரசின் வழிமுறையை பின்பற்ற தயார் என்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திடம் மனு அளித்தனர் .
இந்நிலையில் நேற்று CMDA உறுப்பினர் செயலாளர் டி.கார்த்திகேயன் தலைமையில் சந்தை வளாகம் ஆய்வு செய்யப்பட்டது இதனால் கோயம்பேடு சந்தை திறப்பின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தை தலைநகர் சென்னையின் மிக முக்கியமான அடையாளமான கோயம்படு சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




