
விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்கில் டெஸ்ட் ரைடு செல்வதாக கூறிவிட்டு, பைக்குடன் மாயமான காதல் ஜோடியை கோலாரில் மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சாந்தி திரையரங்கம் அருகே ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட பல்வேறு மாடல் பைக்குகளை விற்பனை செய்யும் விற்பனையகம் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த விற்பனையகத்துக்கு வந்த காதலர்கள், ரூ. 60 ஆயிரம் மதிப்புடைய ராயல் என்ஃபீல்டு பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதாக கூறி ஓட்டிச் சென்றனர்.
ஆனால் நீண்டநேரமாக அவர்கள் கடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணையை துவங்கிய காவல்துறையினர், கோலாரில் பைக்குடன் தலைமறைவாக இருந்த காதலர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெயர் ப்ரீத்தி மற்றும் பிரவீன் என்று தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து திருட்டு சம்பவத்தை காதலர்கள் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




