காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணா ராஜா சாகர் அணைகளிலிருந்து , மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைத்துள்ளதை அடுத்து
காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 45 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வந்தது. இன்று காலை அது 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. 120 அடி கொள்ளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 75.8 அடியாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 அடி உயர்ந்துள்ளது.1 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டு இருப்பதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.