பிற கட்சிகளுடனான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக விரைவில் அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை :
மகாத்மா காந்தியின் 74 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் காந்தியடிகளின் சிலையின் கீழ் உள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார்,எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: 7 பேர் விடுதலை தொடர்பாக அதிமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், தமிழக ஆளுநர் இதுதொடர்பாக நல்ல முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
Read more – குடும்ப சூழல் காரணமாக 63 வயதில் அரங்கேறிய திருமணம் : சில மணிநேரத்திலேயே மனைவி இறந்த சோகம்
மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதாக தெரிவித்த அவர், ‘அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. மேலும்,தேர்தல் நெருக்கும் போது மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதால் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமையிடமிருந்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.