தி.மு.க விற்கு சனிப்பெயர்ச்சி பிடித்துவிட்டது, அ.தி.மு.க விற்கு எந்த பிரச்சனையும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை :
சென்னையில் நடந்த அ.தி.மு.க பிரச்சார பொதுக்கூட்டத்தில் மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்பு வரவேற்புரையாற்றினார்.அப்பொழுது கடந்த பத்து ஆண்டுகளின் அதிமுகவின் சாதனை குறித்தும், திமுக பற்றியும் விமர்சனங்களை முன்வைத்தார். அ.தி.மு.க பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் வேறெந்த மாநிலங்களிலும் செய்யாத எண்ணற்ற நலத்திட்டங்கள் தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் தமிழகத்தில் ரூ.70 ஆயிரம் கோடி வரை சமூகநலன்களுக்காக ஒதுக்கப்பட்டு பொதுமக்களுக்கு நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால் தி.மு.க கட்சியினர் சாத்தான் வேதம் ஓதுவது போல, எங்களை பார்த்து ஊழல்… ஊழல்… என்று குற்றம் காட்டிவருகின்றனர்.
Read more – சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு : மத்திய அரசு தகவல்
தி.மு.க.வின் ஒரே நம்பிக்கை பிரசாந்த் கிஷோர் தான், மு.க.ஸ்டாலின் அல்ல. ஆனால் எப்பொழுது அ.தி.மு.க.வின் ஒரே நம்பிக்கை தமிழக மக்கள் மட்டுமே.காவேரி பிரச்சனை முதல் கச்சத்தீவு வரை அனைத்தையும் தாரைவார்த்தது கருணாநிதியும் மு.க.ஸ்டாலினும் தான்.அதுவும் திமுக ஆட்சியில் தான். தி.மு.க விற்கு சனிப்பெயர்ச்சி பிடித்துவிட்டது, அ.தி.மு.க விற்கு எந்த பிரச்சனையும் கிடையாது, ஜெயலலிதா கூறியது போல்,அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் தாண்டியும் தழைத்திருக்கும். மீண்டும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சியை மலரசெய்வோம் என சூளுரை ஏற்போம் என்று அவர் தெரிவித்தார்.