மதுரையை தமிழகத்தின் 2 வது தலைநகரமாக்க வேண்டும் என தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் நிர்வாக நலன் கருதி, தலைமைச் செயலக கிளையை மதுரைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை தென் மாநிலங்களில் நீண்ட நாளாக வலுத்து வருகின்றது. இந்த நிலையில் தான் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், தமிழகத்தின் 2 வது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார். மேலும் மதுரை 2 வது தலைநகரமாக அமைவது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் விருப்பமாகவும் இருந்து வருகிறது என தெரிவித்தார்.
மதுரை தலைநகரமாவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது உள்ளதால் மதுரை 2 வது தலைநகரமாக மாற்றுவது குறித்து அதிமுக மதுரை மேற்கு மாவட்ட கழகத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே விரைவில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் தென் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.