புரவி புயலின் தாக்கம் கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரவி புயலின் தாக்கமானது கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.சென்னை தொடங்கி கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு வருகிறது ,இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவர்கள் உடனடியாக கரை திரும்புவதற்கும் கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
மேலும் அவர் நிவர் புயலினால் ஏற்பட்ட சேதாரங்களை கணக்கிட மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கிறோம் என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




