ஓ.பி.எஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்து பேசிய அமைச்சர்கள், அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து 2 வது முறையாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் அதிமுக கட்சியின் அடுத்த முதல்வர் யார் வேட்பாளர் யார்? என்பதில் பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் நிலவி வருகின்றனர். ஓ.பி.எஸ் தான் நிரந்தர முதல்வர் என அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களும், அதற்கு பதிலளிக்கும் விதமாக மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன் எனவும் அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் – என நான் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதை சுட்டிக்காட்டி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது சுதந்திர தின உரையின் மூலம் பதிலடி கொடுத்து செக் வைத்துள்ளார் எடப்பாடி.
இதனையடுத்து தான் இன்று காலை முதலே எடப்பாடி மற்றும் ஓ.பிஎஸை தனித்தனியாக செங்கோட்டையன் உள்பட 13 அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். எடப்பாடி தெரிவித்த கருத்துக்களை முதலில் ஓபிஎஸை அவரது இல்லத்தில் தெரிவித்து பேசிய அமைச்சர்கள், அடுத்தப்படியான துணை முதல்வரின் கருத்து குறித்து 2 வது முறையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.