தி.மு.க.வுடன் இணைந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தலில் நாகை முருகேசன், மேரி லூர்துசாமி, மடுவை அ.துரை, கே.எஸ்.ரூஸோ ஆகியோரின் உருவப்படங்கள் திறப்பு நிகழ்ச்சியில் காணொளி காட்சியின் மூலம் திமுக தலைவரும்,சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து அஞ்சலில் செலுத்தினார்.அதன்பிறகு பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
நாடுமுழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.தமிழ்நாட்டிலும் ஆங்காகே விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் போராட்டம் நடைபெற்றுத்தான் வருகிறது.ஏற்கனவே திமுக சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.வருகின்ற டிசம்பர் 18 ம் தேதி மற்ற கட்சி தலைவர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி தொண்டர்கள் மற்றும் நான் உட்பட ஒரு நாள் அடையாள உண்ணாவிரத்தினை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த இருக்கிறோம்.
Read more-இன்றைய ராசிபலன் 16.12.2020!!!
விவசாயிகள் முன்வைக்கும் 3 வேளாண் மசோதாக்களையும் கைவிடவேண்டும்.மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவராதீர்கள் என்று கோரிக்கை விடுக்கிறோம்.பாஜக வை எதிர்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் வருமான வரி சோதனைதானே நாடாகும்.அதையும் சந்திக்க தயார்.தி.மு.க.வுடன் சேர்ந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள். அந்த பணியில் நான் தொடர்ந்து அயராது உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க, ஒவ்வொரு வீட்டிலும் வருமானம் அதிகளவு பெருக, ஒவ்வொரு மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைய, அ.தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,நம் தமிழகத்தை மீட்போம் என்று அவர் பேசினார்.