நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி பகுதியைச் சேர்ந்த பழங்குடி பெண்ணைப் புலி கடித்துக் கொண்டுள்ளது. இதனால் புலியை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளார்கள்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்கார வனச்சரகம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாகும், இன்று மதியம் அந்த வனப்பகுதியில் இன்று மதியம் இந்த வனப்பகுதியில் சுமார் 50 வயதுமதிக்கத்தக்க பெண்ணின் சடலம்கண்டெடுக்கப்பட்டது.அவரின் முகம் மற்றும் தலையில் புலி தாக்கிய காயங்கள் இருந்தன.
இந்த சம்பவம் குறித்து தெரிந்து கொண்டதும் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பட்டது. அதன்பின் மேற்கொண்ட விசாரணையில்
புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்த பெண் மசினகுடி அருகே உள்ளகுரும்பர்பாடி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மாதன் என்பவரின் மனைவி கெளரி (50) என்பது தெரியவந்தது.
புலி தாக்கியதால் அவரின் கழுத்துப் பகுதி மற்றும் முகத்தில் காயங்கள் ஆழமாக ஏற்பட்டுள்ளது. எனவே புலி தாக்குதலில் தான் அவர் உயிரிழந்திருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனரான ஸ்ரீகாந்த் அவர்கள் தெரிவிக்கும்போது “முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கல்லல்ஹா பகுதியில் (சிங்காரா சரகத்தில் )
புலி தாக்கியதால் கெளரி என்ற பெண் உயிரிழந்துள்ளார். இந்த இடம் காப்பக எல்லையிலிருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் காப்புக்காட்டினுள் இருக்கின்றது. பெண் உயிர் இழக்கும் சமயத்தில் அவருடன் அவரது கணவர் மாதன், செல்வம், கோபி மற்றும் ஜெயா என்ற பெண்ணும் உடன் இருந்துள்ளார்கள்.அவர்கள் இந்த வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டு இருக்கும்போது இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவித்தார்கள்.இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்காக வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். எனவும் மேலும், புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சென்ற2013 ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டு தொடர்ந்து புலிகள் தாக்குதல் நடந்திருக்கிறது அதில் இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் இறந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து வனத்துறையினர் அந்த சம்பவத்திற்கு காரணமானமூன்று புலிகளைசுட்டுக் கொன்றனர்.தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்க தொடங்கி உள்ளதால் அப்பகுதி பழங்குடி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.