Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி

September 10, 2021

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக நாகாலாந்து ஆளுநராக இருக்கும் ரவீந்திர நாராயண் ரவி புதிய தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக பொறுப்பு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் பன்வாரிலால் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 9) குடியரசுத் தலைவர் வெளியிட்ட உத்தரவில் இந்த ஆளுநர் குறித்த மாற்றங்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ரவீந்திர நாராயண் ரவி 1974இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் பத்திரிகைத் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு 1976இல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் மாவட்ட எஸ்பி உட்பட பல்வேறு பதவிகளில் கேரளாவிலேயே பணியாற்றினார், பின்னர் சிபிஐ-யில் பணியாற்றியபோது, ​​நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட பல்வேறு முறைகேடுகளைத் துப்பு துலக்கி நடவடிக்கை எடுத்தார்.

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத் துறை பணியகத்தில் (IB) இருந்தபோது, ​​அவர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட விவகாரங்களைக் கையாண்டார். மேலும் ரவி, தெற்காசியாவில் மனித குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார் மற்றும் எல்லை மக்களின் அரசியல் சமூகவியலில் விரிவாகப் பணியாற்றியுள்ளார்.

பல ஆயுதக் கிளர்ச்சி குழுக்களை அமைதி வழிக்குக் கொண்டு வந்தவர் ரவி. 2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் நரேந்திர மோடியின் மத்திய அரசில் அவர் பிரதம மந்திரி அலுவலகத்தில் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார், உளவுத் துறை ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டினார். 29 ஆகஸ்ட் 2014 அன்று நாகா சமாதான பேச்சுவார்த்தையில் அவர் முக்கியப் பங்காற்றினார். அக்டோபர் 2018இல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்த பின்னணியில் 2019 ஆகஸ்டில் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவி, அங்கே இரு ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு ஆளுநராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி… உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

Next Post

துப்பாக்கிச் சூடு நடந்தது அதிமுக ஆட்சியில் தானே?: துரைமுருகன் கேள்வி

Next Post

துப்பாக்கிச் சூடு நடந்தது அதிமுக ஆட்சியில் தானே?: துரைமுருகன் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version