நீலகிரி : காவல்துறையினரிடம் எளிதில் புகார் தெரிவிக்க புதிய செயலி உருவாக்கம்.
நீலகிரி மாவட்ட மக்கள் நேரடியாக தங்களின் புகார்கள் மற்றும் குறைகளை காவல்துறையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.சசிமோகன் இ.கா.ப அவர்கள் 24.08.2020–ம் தேதியன்று மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் படுத்தினார்.
தற்போது கொரோனா தொற்று உள்ள காரணத்தினால் மக்கள் இச்செயலியை பயன்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம். மேலும் மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுலபமாக தங்களது புகார்களை இச்செயலின் மூலம் பதிவு செய்யலாம். இதற்கென தனியாக கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டு செயலில் வரும் புகார்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இச்செயலியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள், காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகளின் அதிகாரிகள் தொலைபேசி எண் போன்று அனைவரது விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் சுற்றுலா பயணிகள் தங்கள் விருப்பப்பட்டு செல்ல வேண்டிய சுற்றுலா தலங்களின் விவரங்களையும் தாங்கள் இருக்கும் இடத்தின் மிக அருகில் உள்ள காவல் நிலையத்தையும், பேருந்து நிலையம், இரயில் நிலையம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
Link:
https://play.google.com/store/apps/details…