5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்யாததை கடைசி 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை :
சிவகங்கை காங்கிரஸ் எம்.பி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அவர், 5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்யாததை கடைசி 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர் என்றார்.
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றக் கூட்டத் தொடரில் விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள், ஆசிரியர்கள் மீதான ஊதிய உயர்வு வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து ப. சிதம்பரம் கூட்டத்தில் முதல் 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் அகங்கார ஆட்சி நடைபெற்றது. கடந்த 5 ஆண்டுகளில் செய்யாததை எல்லாம் இந்த மூன்று மாதத்தில் மக்களுக்கு செய்து மீண்டும் ஆட்சியை பிடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இது கேலிகூத்தாக இருக்கிறது என்று தெரிவித்தார்.