தேனி அரசு மருத்துவமனையில் கொரொனா வார்டு அருகே இருந்த குடோனில் ஏற்பட்ட தீவிபத்து நோயாளிகளுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டத்தில் இதுவரை 3087 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1625 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1421 பேர் தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கொரோனா வார்டிற்கு அருகே உள்ள தூய்மைப்பணிக்காக பயன்படுத்தப்படும் லைசால், ஆசிட் போன்றவை வைக்கபட்டிருக்கும் குடோனில் தீடிரென ஏற்பட்ட தீவிபத்தால் நோயாளிகள் பதற்றம் அடைந்தனர்.
தகவலறிந்து உடனடியாக விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதும் ராசாயணம் கிடங்கு என்பதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனையடுத்து கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.