பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. ஆனால், தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலமாக அவ்வப்போது எஸ்.பி.பி.-யின் உடல்நிலைக் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பி சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், உடல்நலம் தேறி வருகிறார் என்றும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தற்போது அப்பாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவர் விரைவில் குணமடைவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அப்பாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.