வட சென்னையில் உயிரினைப்பறிக்கும் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 45 பேரை ஒரே நாளில் போலீசார் கைது செய்துள்ளனர்.

விளையாட்டு விபரீதம் ஆகும் என்பதற்கு சிறந்த உதராணம் தான் மாஞ்சா நூலினை கொண்டு பட்டம் விடுவது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார்கள் என்று வரும் செய்திகள் நின்றபாடில்லை. இதன் காரணமாக தான் மாஞ்சா நூலில் பட்டம் விடும் பழக்கத்தினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

ஆனாலும் இந்த நூலின் விற்பனை மற்றும் பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்த நிலையில் வடசென்னை பகுதியில் மாஞ்சா நூலினைக்கொண்டு பட்டம் விட்டு விளையாடிய 45 பேரை போலீசார் ஒரே நாளில் கைது செய்துள்ளனர். மேலும் மாஞ்சா நூல் பட்டம் தயாரிப்பாளர்கள் மற்றும் பட்டம் விடுபவர்களை பிடிக்கும் பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.




