நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு, வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான மருத்துவ கலந்தாய்வு, சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.
நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்விற்கான புதிய திருத்தப்பட்ட அட்டவணை, தற்போது மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, வரும் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் மருத்துவ கலந்தாய்வு, அடுத்த மாதம் டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எந்தெந்த தேதிகளில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்ததான அனைத்து விவரங்களும், மருத்துவ கல்வி இயக்குனராக இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.