
மூட்டையாக மூட்டையாக ரூ. 2.5 லட்சத்தை சில்லறையாக கொடுத்து சூப்பர் பெர்ஃபாமன்ஸை பைக்கை வாங்கிச் சென்ற இளைஞரின் செயல் தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பூபதி உயர்ரக மாடல் பைக்கை வாங்க வேண்டும் என மிகவும் கனவுகொண்டு இருந்தார். அதற்காக கையில் பணம் இருந்த போதும், அதன்மூலம் சமூகத்துக்கு நற்சிந்தனையை ஏற்படுத்த விரும்பினார்.
அதன்படி சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக கடைகள், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் கையில் இருந்த பணத்தை கொடுத்து ரூ. 2.5 லட்சத்தை ரூ. 1 நாணயமாக மாற்றிக் கொண்டுள்ளார். தொடர்ந்து தனது செயல்பாடுகள் குறித்து பைக் ஷோரூமிடமும் பேசியுள்ளார்.
இளைஞர் பூபதியின் செயல்பாடுக்கு மகிழ்ச்சி தெரிவித்த பைக் ஷோரூம், சில்லறையாக கொடுத்து பைக் வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்தது. அதன்படி ரூ. 2.5 லட்சத்தை ரூ. 1 நாணயமாக கொடுத்து உயர்ரக மாடல் பைக்கை வாங்கியுள்ளார் பூபதி.
இதுதொடர்பான செய்தி சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து, பூபதியின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேபோன்று, சில்லறையாக சேர்த்து பைக் வாங்கிய சம்பவங்களை தொகுத்து இளைஞர் பூபதி தன்னுடைய யூ- ட்யூப் சேனலிலும் வீடியோ வெளியிட்டுள்ளார்.




