சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை:
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சஞ்ஜீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நீதிபதிகள் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Read more – அ.தி.மு.க.விற்கு தாயில்லாத பிள்ளையாய் நினைத்து வாக்களியுங்கள் : அமைச்சர் செல்லூர் ராஜு
சஞ்ஜீப் பானர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவின் பெயரில், நீதிபதிகள் நியமனத் தேர்வுக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று சஞ்ஜீப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.




