சாத்தூர் அருகே ஏற்பட்ட திடீர் தீயால் அங்கிருந்த பட்டாசு ஆலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விருதுநகர் மாவட்டம்கோவில்பட்டியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாத்தூர் ஐ அடுத்து வள்ளிமயில் என்ற இடம் உள்ளது அங்கு” வெற்றிவேல்” என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த திடீர் தீ பரவியது அப்பொழுது அவரது ஆலைகளில் இருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன்வெடிக்க தொடங்கியது. இதனால் சுற்றுவட்டாரங்களில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் .அவர்கள் ஒருபுறம் தீயை அணைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இன்னொரு பக்கம் பட்டாசுகள் வெடித்து சிதறி கொண்டே இருந்தன நீண்ட போராட்டத்தில் ஒரு கட்டத்தில் பட்டாசு ஆலையில் இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது.
சுமார் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி 2 மணி நேரத்திற்குள்ளாக தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர் அதன் பின்பு அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர் .
தீவிபத்து நடந்த இடத்தில்போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் .
இந்த தீ விபத்து காரணமாக கோவில்பட்டி – சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார்1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
கடந்த மார்ச் மாதம் இதே சாத்தூரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர் இதுபோன்ற விபத்துகள் தொடராமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது .