இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டத்தை கண்டித்து வருகின்ற ஜனவரி 11 ம் தேதி இலங்கை துணைத்தூரகம் முற்றுகையிடப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை :
இலங்கை உள்நாட்டின் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் இன மக்கள் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை ராஜபக்சே சகோதர்களின் உத்தரவால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து கூறியதாவது:
Read more – உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற 11 ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும், படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக நினைவு முற்றத்தை சிங்கள அரசு இடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.