எதிர்க்கும் வகையிலே அனைத்து சட்டங்களையும் இயற்றினால் அதை எதிர்க்காமல் என்ன செய்வது என்று சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 24 நாட்களாக பஞ்சாப்
மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் ஆங்காங்கே போராட்டமும் நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில்,புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி,நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்பொழுது அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான்,டெல்லியில் கடந்த 24 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் தமிழர் கட்சி போராடி வருகிறது.
Read more – எல்லை மோதல் விவகாரத்தில் எதையும் எதிர்கொள்ள இந்தியா தயார்:மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
விவசாயிகள் விளைவிக்கும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி கேட்கும் போது இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே அதை விற்று லாபம் பார்க்கிறார்கள்.பாஜக அரசு எதிர்க்கும் வகையிலே அனைத்து சட்டங்களையும் இயற்றினால் அதை எதிர்க்காமல் என்ன செய்வது என்று கேள்வியும் சீமான் எழுப்பினார்.மேலும்,முதல்வர் எடப்பாடி பழனிசாமியாவது,ஒரு காலத்தில் விவசாயம் பார்த்தார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னை எந்த விதத்தில் விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார் என்றும் கூறினார்.