அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு நுண்ணறிவாளர்கள் மற்றும் சை-டெக் ஸ்ட்ராட்டஜிஸ் இணைந்து தகவல்களின் அடிப்படையில் ஆராய்ச்சிகளின் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் முதல் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் சுமார் 1.6 லட்சம் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 2,314 பேர் இடம் பிடித்துள்ள அந்த பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் பி. பாலசுப்ரமணியம், கே.ராமச்சந்திரன், எம். ஜி. சேதுராமன், எஸ். மீனாக்ஷி, எஸ். ஆபிரகாம் ஜான், கே. மாரிமுத்து மற்றும் ஜி. சிவராமன் என 7 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இதனை அடுத்து உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள 7 போராசிரியர்களுக்கும், காந்திகிராம கிராமியப் பல்கலை. வேந்தர் கே.எம்.அண்ணாமலை, துணைவேந்தர்(பொ) சுப்புராஜ், பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




