சென்னையில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் அத்தியாவசிய பணி செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்காக வரும் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து இயக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணியாளர்கள் என்று மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும் இதற்காக பயண அனுமதியாளர் அட்டை இருந்தால் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் பொது மக்கள் யாரும் ரயில் நிலையத்துக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் குறைந்த அளவில் புறநகர் ரயில் சேவையை தொடங்கலாம் என தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. இதில் பயணிப்பவர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும்.




