திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளை தனித்தனியே சந்திக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
கடந்த வாரத்தில் மதுரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்திப்பேன் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார் ஸ்டாலின். கட்சியின் வளர்ச்சிப்பணி, களநிலவரம், உட்கட்சி விவகாரம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்தச் சந்ழிப்பு குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கான வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ள நமது திராவிடமாடல் அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திடவும் – தமிழ்நாட்டை வீழ்த்தத் துடிக்கும் வீணர்களுக்குத் தோல்வியைப் பரிசளித்து விரட்டிடவும் – வலிமையான கழகக் கட்டமைப்புக்கு ஊக்கம் தந்து களப்பணியாற்றிட உடன்பிறப்பே வா! தமிழ்நாட்டின் நலனுக்கு ஊறு விளைவிக்கத் திட்டமிடும் பகைக் கூட்டத்தை மக்களின் துணைகொண்டு வீழ்த்திடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.





