தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் சார்பில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் மூட்டை விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால், மக்கள் நேரடியாக பயனடையும் வகையில் அறிமுகப்படுத்த திட்டம் மலிவு விலையில் சிமெண்ட் விற்பனை. கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்மா சிமெண்ட் எனும் அந்த திட்டத்தின் மூலம், ஒரு மூட்டை 190 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. சந்தையில் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் , சிமெண்ட் கிடைத்ததால் நடுத்தர மக்கள் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக பயனடைந்து வருக்கின்றனர்.
இந்தத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகளாக சிமென்ட் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் மூலப் பொருட்களின் விலை, டீசல் விலை, ஊழியர்களின் ஊதியம் ஆகியவை உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அம்மா சிமென்ட் மூட்டை விலையை 190 ரூபாயில் இருந்து 216 ரூபாயாகத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இருப்பினும் அம்மா சிமென்ட் வாங்க முன்பே பதிவு செய்தோருக்குப் பழைய விலையிலேயே வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.