தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இருந்து மாவட்டங்கள் செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பொது பேருந்துபோக்குவரத்துக்கு வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வருகிற 7-ந்தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதற்கிடையே மாநிலத்துக்குள்ளாக மட்டும்சுமார் 3 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் இயக்கத்தில் இருந்து வருகின்றன. எனவே அந்த பேருந்துகளும்வருகிற 7-ந்தேதி முதல் செயல்படும்என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஆம்னி பேருந்துகள்வருகிற 7-ந்தேதி முதல் இயங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.இதில் நேற்று மாலை ஆலோசனை நடத்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அந்த ஆலோசனையின் முடிவில் இந்த தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆம்னி பேருந்து சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் தெரிவித்திருப்பதாவது:-
சென்ற 5 மாதங்களுக்கு மேலாக எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. ஒரு பேருந்தை அதன் உரிமையாளர் எடுத்து செல்லவேண்டுமானால் தற்போது குறைந்தது ரூ.2 லட்சமும், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலுள்ள 2 காலாண்டு சாலை வரியாக ரூ.2½ லட்சமும் என முழுவதுமாக ரூ.4½ லட்சம் வரை இப்போது தேவைப்படுகிறது.
எங்கள் அனைவருக்குமே பேருந்து இயக்க வேண்டும் என்ற ஆசைகள் உள்ளது என்றாலும், தற்போது நிலவும் சூழ்நிலை எங்களால் இதனை இயக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறோம். எனவே வருகிற 7-ந்தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. இதில்முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு, எங்களுக்கு 2 காலாண்டு சாலை வரியை தள்ளுபடி செய்வதோடு, மேலும் சில கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்திட உதவ வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.