தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 4.78 இலட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணி இன்று தொடங்கியது. கோவில் நிலங்களை ரோவர் கருவிகளைக் கொண்டு அளவிடும் பணியை அமைச்சர் சேகர்பாபு மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலில் இன்று தொடங்கிவைத்தார். அளவிடும் பணிகள் ஓராண்டுக்குள் முடியும் என அமைச்சர் கூறினார்.