சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இதன்படி, வீடுகளில் இருந்து குப்பை கொட்டுவதற்கு 10 ரூபாய் முதல் 100 வரையிலும்,வணிக நிறுவனங்களுக்கு 1000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளில் ரூபாய் 300 முதல் 3000 வரையிலும், தியேட்டர்களில் ரூபாய் 750 முதல் 2500 வரை செலுத்தவேண்டும். பொது நிகழ்ச்சிகள் நடத்துவோர் ரூபாய் 5000 முதல் 20,000 வரையிலும்,மருத்துவ கழிவுகளை வெளியேற்ற மருத்துவமனைகள் ரூபாய் 2000 முதல் 4000 வரை பெறப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Read more – தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய விடைத்தாள் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
இந்த விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாயும்,கட்டிட கழிவுகளை கொடுப்பவருக்கு 5000 ரூபாயும் வசூலிக்கப்படும். மேலும், குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் 5000 ரூபாயும்,குப்பைகளை எரித்தால் 2000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.