தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிபாளையம் :
சட்டசபை பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :
Read more – தமிழகத்தில் அதிமுக கட்சி ஹாட்ரிக் சாதனையாக ஆட்சி அமைக்கும் : அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தான் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றார்.மேலும், பொதுத்தேர்வுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ள நிலையில் பள்ளிகளில் வாக்கு சாவடிகள் அமைய இருக்கிறது தேர்தல் அறிவிப்பை பொறுத்து பொதுத் தேர்வுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




