கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு இறுதி பருவ மாணவர்களுக்காக இன்று( டிசம்.7)முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் மாதம் வரை கடுமையாக பின்பற்றப்பட்டது.அதன் பிறகு அடுத்தடுத்த தமிழக அரசின் தளர்வுகள் ஒவ்வொரு இறுதி மாதத்திலும் கொண்டு வரப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.அதன்படி டிசம்பர் 7ம் தேதி (இன்று) முதல் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:
*கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறை என அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளிகட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
*உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை முன்னெச்சரிக்கை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
*நுழைவு வாயில்களில் வெப்பநிலை கணக்கிடும் கருவி, சானிடைசர், முக கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும்.
*பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் கண்டிப்பாக மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது.
*மாணவர்கள், பேராசிரியர்களின் உடல்நிலை சீரான இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
*நேரடி வகுப்புகள் பயில விருப்பம் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்றுக்கொண்டு அதற்கான புத்தகங்களையும் பெற்று கொள்ளலாம்.
*விடுதியில் ஓர் அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி.
போன்ற வழிமுறைகளை நிச்சயம் பின்பற்றவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.