தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட சேதாரங்களை சீரமைக்க முதற்கட்ட நிதியாக ரூ.74.24 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான நிவர் புயல்,புதுச்சேரி அருகில் கரையை கடந்த போது வடமாவட்டங்களான விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது.தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி நிவர் புயல் பாதிப்பு பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.கடந்த ஒரு வார காலமாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து புயலால் பாதித்த இடங்களை பார்வையிட்டனர்.
இந்தநிலையில்,தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட சேதாரங்களை சீரமைக்க முதற்கட்ட நிதியாக ரூ.74.24 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், நீர்நிலைகள், சாலைகள், மின்கம்பங்கள் போன்றவற்றை சீரமைக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.