சென்னையில் உள்ள ஜூவல்லரி நிறுவனங்கள் உட்பட 32 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஜூவல்லரி நிறுவனங்கள் உட்பட 32 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செளகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள மோகன் லால் ஜூவல்லரியில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த ஜூவல்லரியின் உரிமையாளர் மோகன் லால் கபாரி வசித்து வரும் பங்களா மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மோகன் லால் ஜூவல்லரியின் மொத்த வியாபார தொடர்பின் அடிப்படையில் மும்பையிலும், சமீபத்தில் போலி நகை சர்ச்சையில் சிக்கிய கடைநல்லூர் ஏ.ஜே.கே ஜூவல்லரியிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் கல்வி நிலையங்களில் நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.